விலை குறைந்தது கோழி இறைச்சி

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விலை குறைப்பின் பின்னர் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் புதிய விலை 1,180 ரூபாவாகவும் கறி கோழி 1,100 ரூபாவாகவும், மற்றும் தோல் இல்லாத கோழி இறைச்சி 1,100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ கிராம் மாட்டிறைச்சி 2,400 ரூபாவாகவும் ஒரு கிலோ கிராம் ஆட்டிறைச்சி 3,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.