விலை குறைக்கப்படவுள்ள மேலும் இரு பாடசாலை பொருட்கள்

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பைகள் மற்றும் காலணி ஆகியனவற்றின் விலை குறைக்கப்படவுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் காலணி மற்றும் பைகளுக்கான விலையை 10 சதவீதத்தால் குறைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்தகாலங்களில் நாட்டில் ஏற்பட்ட டொலர் நெருக்கடியினால் காலணி மற்றும் பைகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதன் காரணத்தால் இவற்றின் விலை அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க