
மரக்கறிகளின் விலை அதிகரிப்பால் விற்பனையில் சரிவு
-திருகோணமலை நிருபர்-
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து இருக்கின்ற நிலையில் மரக்கறிகளின் விலைகளும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
மரக்கறிகளின் விலை அதிகரிப்பால் திருகோணமலை பொதுச் சந்தையில் மக்களின் வருகை குறைவாக காணப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் திருகோணமலை பொதுச்சந்தை கட்டிடத் தொகுதியில் ஒரு கிலோ நுவரெலியா கரட் 480 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அத்துடன் மலேசியா போஞ்சி ஒரு கிலோ 800 ரூபாய்க்கும் வெலிமட போஞ்சி 680 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகின்றது.
அத்துடன், கல் கோவா 520 ரூபாய், கோவா 480 ரூபாய்க்கும் லீக்ஸ் 360 ரூபாய்க்கும், தக்காளி 360 ரூபாய்க்கும், எம்.ஜ. பச்சை மிளகாய் 400 ரூபாய்க்கும், மிளகாய் 320 ரூபாய், கறி மிளகாய் 800 ரூபாய், கத்தரி 300 ரூபாய், கிழங்கு 320 ரூபாய், தேசிக்காய் 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மரக்கறிகளின் விலை அதிகரிப்பினால் தாம் மிகவும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாகவும், இன்னும் கடனாளியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆகவே, அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுப்பதுடன் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறிகள் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை வி டுக்கின்றனர்.
