விலைக்கழிவில் பெற்றோல், டீசல் விற்பனை
-சம்மாந்துறை நிருபர்-
பெற்றோல் ரூ. 7 விலைக்கழிவிலும் , டீசல் ரூ. 3 விலைக்கழிவிலும் தாம் விற்பனை செய்வதாக பெற்றோல் நிலைய உரிமையாளர் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தியுள்ளார்.
சம்மாந்துறையில் உள்ள தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சீன நிறுவனமான சினோபெக் நிறுவனத்தின் எரிபொருளே இவ்வாறு விற்பனை செய்யப்படுவதாக விளம்பரப்படுத்தியுள்ளனர்.
இங்கு, சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பெற்றோல் விலைகளை விட 07 ரூபா குறைவாகவும் , டீசல் விலைகளை விட 03 ரூபா குறைவாக சினோபெக் எரிபொருள் விற்பனை நிலையங்கள் ஊடாக எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்