விலைகளை குறைத்த ஐ.ஓ.சி

லங்கா இந்தியன் ஒயில் கம்பெனி (LIOC), பெட்ரோல் விலையை ‘சைபெட்கோ’வின் விலைக்கு சமப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறது.

92 ஆக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

309 ரூபாயாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 299 ரூபாயாகும்.

95 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 361 ரூபாயாகும்.