விரைவில் வெளியாகும் துருவ நட்சத்திரம்

நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்துள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’.

நிதி பிரச்சனை உட்பட பல பிரச்சனையின் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது தடைபட்டது.

இருந்தாலும் அந்த தடைகளை எல்லாம் கடந்து ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்தது.

இதையடுத்து இப்படம் வெளியாவது தள்ளிக்கொண்டே போனது.

பலமுறை திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டாலும், அந்த திகதியில் திரைப்படத்தை படக்குழுவால் வெளியிட முடியவில்லை.

இந்நிலையில் துருவ நட்சத்திரம் பட வெளியீட்டிற்கான பிரச்சனைகள் தீர்ந்து விட்டதாகவும் விரைவில் படத்தின் வெளியீட்டு திகதியை அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்