விரைவில் ஓய்வினை அறிவிப்பார்களா ரோஹித்,கோலி?
இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் வீராட் கோலி ஆகியோர் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளனர்.
குறித்த இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வினை அறிவித்துள்ள நிலையில் ஒருநாள் போட்டிகளில் மாத்திரம் விளையாடி வருகின்றனர்.
இந்தநிலையில் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றாலும் அணித்தலைவர் பதவியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.
இதன்படி இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான அணித்தலைவராக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அணித்தலைவர் பதவியை பறித்ததால் ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
அதேப்போன்று வீராட் கோலிக்கும் இதே நிலைதான்.
இந்தநிலையில் அவுஸ்திரேலிய தொடருக்கு பின்னர் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் அணியில் இடம் பெறுவது கடினமான விடயம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடியும் தருவாயில் இருப்பதாக கிரிக்கெட் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.