
விருப்பு வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும் : அநுரதான் வெற்றி பெறுவார் ?
இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கும் என்றும், வெற்றியாளரின் அறிவிப்பு இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை வரை தாமதமாகலாம் என்றும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரவிற்கும் ,ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான இடைவெளி குறைவாக உள்ள நிலையில் மற்றும் தேசிய மக்கள் சக்தி 50.1 சதவீதத்தை எட்டாது என்று எதிர்பார்க்கப்படுவதால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை எண்ணும் பணி நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது.
எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார வெற்றி பெறுவார் என, குறித்த வட்டார தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
