வியாழேந்திரன் பிணையில் விடுதலை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று செவ்வாய்க்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் மார்ச் மாதம் 25 ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

காணி தொடர்பில் 15 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து குறித்த குறித்த கையூட்டலை பெறுவதற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர்  வியாழேந்திரன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில்  ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

மேலும் இதனை தொடர்ந்து ஏப்ரல் 1 ஆம் திகதி கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்