வியட்நாமை தாக்கிய கஜிகி புயல் 3 லட்ச மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்
வியட்நாமைத் தாக்கிய கஜிகி புயலால் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வியட்நாமின் மத்திய மற்றும் வடக்கு கடலோரப் பகுதிகளைத்நேற்று காலை தாக்கியுள்ளது.
அத்தடன் புயல் காரணமாக பலத்த காற்று, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
அத்துடன் வியட்நாம் அரசாங்கம், பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இருந்து சுமார் 600,000 பேரை வெளியேற்ற உத்தரவிட்டதுடன் மீட்புப் பணிகளில் ராணுவமும், துணை ராணுவப் படையினரும் ஈடுபட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மத்திய வியட்நாமில் உள்ள இரண்டு விமான நிலையங்களில் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
இப் புயலால் வீடுகள், மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதுடன், மின் கம்பங்கள் சரிந்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மேலும் இதனால் தலைநகர் ஹனோயிலும் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
புயல் பலவீனமடைந்து லாஓஸை நோக்கி நகர்ந்தாலும், கனமழை மற்றும் வெள்ளத்தால் நிலச்சரிவு அபாயம் தொடர்ந்தது.
இது குறித்து மேலும், தெரியவருகையில் வியட்நாமின் கடலோரப் பகுதிகளில் பரவலான சேதங்களை ஏற்படுத்தினாலும், விரைவான வெளியேற்றம் காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.