விம்பிள்டன் நாயகனும், ஜனநாயகனும் : வைரலாகும் புகைப்படம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகின்றது.
இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், உலகின் முன்னணி வீரர்களான இத்தாலியின் ஜானிக் சின்னர் (Jannik Sinner) மற்றும் ஸ்பெய்னின் கார்லோஸ் அல்காரஸ் (Carlos Alcaraz) ஆகியோர் மோதினர்.
குறித்த போட்டியில் 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் கார்லோஸ் அல்காரஸை வீழ்த்தி, ஜானிக் சின்னர் (Jannik Sinner) முதல் முறையாக செம்பியன் பட்டம் வென்றார்.
இதனையடுத்து விம்பிள்டனின் உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில், “விம்பிள்டன் நாயகன்’ என்ற தலைப்பில், ஜானிக் சின்னர் கிண்ணத்துடன் பொது மக்களிடம் புகைப்படம் எடுப்பது போன்ற பதிவொன்றை வெளியிட்டுள்ளது.
ஜனநாயகன் திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட புகைப்படத்தைப் போன்றே, குறித்த புகைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
