விமான விபத்தில் 19 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விமான விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

தான்சானியாவில் உள்ள விக்டோரியா ஏரியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் காசிம் மஜாலிவா தெரிவித்துள்ளார்.

வர்த்தக தலைநகரான தாருஸ் சலாமில் இருந்து புறப்பட்ட விமானம், இப்பகுதியில் நிலவிய மிகமோசமான காலநிலையில் தரையிறங்க முயன்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முதல்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

விமானத்தில் 39 பயணிகள், இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு கேபின் பணியாளர்கள் உட்பட 43 பேர் இருந்ததாக பிராந்திய ஆணையர் ஆல்பர்ட் சலமிலா தெரிவித்துள்ளார்.

விமானத்தில் பயணித்த 43 பேரில் 26 பேர் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனம் முன்னதாக தெரிவித்துள்ளது.

48 இருக்கைகள் கொண்ட விமானத்தில் அதிகமானவர்கள் விமானத்தில் இருந்தார்களா என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை என்று பிராந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் ஒரு கைக்குழந்தை உட்பட 39 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்ததாக விமான நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.