விமான விபத்தில் 14 பேர் பலி

பிரேசிலின் வடக்கு அமேசானாஸ் மாநிலத்தில் நேற்று சனிக்கிழமை மாலை விமானம் விபத்துக்குள்ளானதில் சிறிய ஜெட் விமானத்தில் இருந்த 14 பேர் இறந்துள்ளதாக, மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து மாநில தலைநகரான மனாஸிலிருந்து 400 கிமீ (248 மைல்) தொலைவில் உள்ள பார்சிலோஸ் மாகாணத்தில் நடந்துள்ளது.

பார்சிலோஸில் நடந்த விமான விபத்தில் பலியான 12 பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்து உடல்கள் ஏற்கனவே அகற்றப்பட்டுவிட்டதாகவும், பலியானவர்கள் பிரேசில் சுற்றுலா பயணிகள் என்றும் தெரியவருகின்றது.

இப்பகுதி அதிக மழைப்பொழிவை எதிர்கொள்கிறது என்றும், தரையிறங்கும் போது எடுக்கப்பட்ட பாதையில் ஏற்பட்ட பிழையே விபத்துக்கான காரணம் என்றும் தெரியவருகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்