விமான விபத்தில் 133 பேர் உயிரிழப்பு: மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்

விமான விபத்தில் 133 பேர் உயிரிழப்பு: மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி பயணித்த நிலையில், 133 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

52 பிரிட்டன் பிரஜைகள் பயணித்ததாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் விமான விபத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில்  242 பேர் பயணித்த நிலையில் அவர்களில் , 7 குழந்தைகள் மற்றும்  இரு  கைக்குழந்தைகளும்  பயணித்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக  முன்னெடுக்கப்படுள்ளதாக  இந்திய  தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News