
விமான பயணியிடமிருந்து இரத்தினக்கல் பொதியை திருடிய ஊழியர்கள் கைது
சிட்னிக்கு விமானத்தில் செல்லவிருந்த பயணி ஒருவரிடமிருந்து 14 இரத்தினக் கற்கள் அடங்கிய பொதியொன்றை திருடிய குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இருவரை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் பயணப் பொதிகளை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி சிட்னிக்கு செல்லவிருந்த விமானத்தில், பயணப்பொதிகளை வைக்கும் பகுதியில் பயணி ஒருவரின் பொருட்களிலிருந்து இந்த இரத்தினக்கல் அடங்கிய பை திருடப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று திங்கட்கிழமை நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
