விமான நிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி ரூ.215 மில்லியன் தங்க பிஸ்கட்டுகளுடன் கைது
விமானநிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி ஒருவர், ரூ.215 மில்லியன் மதிப்புள்ள தங்க பிஸ்கட்களை கடத்த முயன்றதற்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு, கடவாலாவைச் சேர்ந்த 54 வயதான இவர், சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு சேவைகள் அமைப்பின் தலைவராகவும் பணியாற்றுகிறார். இன்று காலை 6:50 மணிக்கு, சிறப்பு வணிக புறப்பாடு வழியாக விமான நிலையத்திலிருந்து வெளியேறும்போது அவர் கைது செய்யப்பட்டார்.
இவரிடமிருந்து மொத்தம் 5 கிலோகிராம் மற்றும் 941 கிராம் எடையுள்ள 51 24 காரட் தங்க பிஸ்கட்களை அவர் தனது கணுக்காலில் சுற்றிக் கொண்டு கால்உறையுடன் மறைத்து வைத்திருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடத்தலுக்காக ஒரு நபர் தங்கத்தை அவரிடம் ஒப்படைத்திருக்கலாம் என்றும், அவர் சில காலமாக இதேபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
சுங்கத் துறை அவரைத் தடுத்து வைத்து, சம்பவம் குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.