
விமானம் – ஹெலிகொப்டர் விபத்து : 30 பேரின் சடலங்கள் மீட்பு!
அமெரிக்கப் பயணிகள் விமானம் ஒன்று ஹெலிகொப்டர் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 30 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்திலிருந்து 64 பேருடன் பயணித்த குறித்த விமானம் அந்த நாட்டு இராணுவ ஹெலிகொப்டர் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து குறித்த விமானம் மற்றும் ஹெலிகொப்டர் என்பன பொட்டோமெக் ஆற்றில் வீழ்ந்துள்ளன.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை அமெரிக்காவின் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க முற்பட்டபோது இடம்பெற்றதாகக் தெரிவிக்கப்படுகின்றது
விபத்துக்குள்ளான விமானத்தில் 60 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் பயணித்ததுடன் ஹெலிகொப்டரில் 3 இராணுவ உத்தியோகத்தர்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
