விமானப்படையின் ஈருருளி ஓட்டப்பந்தயம் ஆரம்பம்

இலங்கை விமானப்படையின் 74 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை விமானப்படை ஈருருளி சவாரி, இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.
வீரவில விமானப்படைத் தளத்திற்கு முன்பாக இந்த சவாரி ஆரம்பமாகியது.
ஆண்களுக்கான ஈருருளி ஓட்டப் பந்தயம் மூன்று நாட்கள் நடைபெறும்.
முதல் கட்டமாக இன்று வெள்ளிக்கிழமை வீரவில முதல் இரத்தினபுரி வரை 140.05 கிலோமீட்டர் பந்தயம் நடைபெறும்.
இதில் 168 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.