விமானநிலையத்தில் பெருமளவிலான குஷ் போதைப்பொருள் மீட்பு

குஷ் போதைப்பொருளை விமான நிலையத்திற்கு வெளியே கடத்த முயன்றபோது, நான்கு இலங்கை பயணிகள் இன்று திங்கட்கிழமை கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்படடுள்ளனர்.

அவர்களிடம் இருந்த 268.4 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கையிருப்பையும் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

சந்தேக நபர்கள் தாய்லாந்தின் பாங்காக்கில் போதைப்பொருட்களை வாங்கி, இந்தியாவின் மும்பைக்கு கொண்டு சென்று, பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

20.684 கிலோ குஷ் போதைப்பொருள் அடங்கிய 20 பொதிகளை அவர்களின் பொருட்களுக்குள் மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

நான்கு பயணிகளும் கைப்பற்றப்பட்ட குஷ் போதைப்பொருள் கையிருப்பும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளன.