விமானநிலையத்தில் தொழிலதிபர் கைது

 

இலங்கைக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ரூ.300 மில்லியன் மதிப்புள்ள கைடயக்க தொலைபேசி மற்றும் மடிக் கணினிகளை கொண்டு வந்த  தொழிலதிபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கொழும்பு 13 கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 45 வயது தொழிலதிபர் எனவும் அவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்துவருபவர் எனவும் தெரியவருகின்றது.

குறித்த சந்தேக நபர் பெப்ரவரி முதலாம் திகதி மாலை 4:30 மணிக்கு கட்டார் விமானம் மூலம் இலங்கைக்கு வந்த போதிலும் அவரது பொருட்கள் குறித்த விமானத்தில் இல்லை எனவும் தெரியவருகின்றது..

தொழிலதிபரின் பொருட்கள் வேறு விமானத்தில் விமான நிலையத்திற்கு  அனுப்பப்பட்டன. அதை உரிமை கோருவதற்காக சந்தேக நபர் பெப்ரவரி 13 ஆம் திகதி விமான நிலையத்திற்கு வந்து இருந்தார் .

சோதனையின் போது ​​சுங்க அதிகாரிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 180 நவீன கைடயக்க தொலைபேசி மற்றும் மடிக் கணினிகளை கண்டுபிடிக்கப்பட்டன.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தொழிலதிபரை தடுத்து நிறுத்தி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.