விமானத்தில் நிர்வாணமாக உலா வந்த பெண்!

அமெரிக்காவின் ஹூஸ்டனில் இருந்து பீனிக்ஸ் நோக்கி சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த திங்கள்கிழமை புறப்பட்டது.

30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் சென்றுகொண்டிருந்தபோது பெண் பயணி ஒருவர் திடீரென விமானத்திலிருந்து இறங்க வேண்டும் என்று விமான ஊழியர்களிடம் கூறியுள்ளார்.

விமான ஊழியர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கவும் அந்தப் பெண் தன் உடைகள் அனைத்தையும் கழற்றிவிட்டு நிர்வாண நிலையில் சத்தமாக கத்த ஆரம்பித்துள்ளார்.

ஆடைகளை கழற்றி கத்தியபடி நிர்வாணமாக 25 நிமிடங்கள் உள்ளேயே ஓடியுள்ளார்.

குறித்த பெண்ணின் செயல்கள் விமானத்திலுள்ள அனைவர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் விமானம் மீண்டும் தரையிரங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.