விமானங்களை எதிர்க்கும் ஏவுகணை சோதனையில் வட கொரியா

விமானங்களை எதிர்க்கும் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்ததாக வட கொரியா அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மேற்கொள்ளும் இராணுவ பயிற்சிகளை தொடர்ந்து வட கொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

ஏவுகணை சோதனையை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் நேரில் மேற்பார்வையிட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மேற்கொண்ட இராணுவ பயிற்சி முகாமின் இறுதிநாளில் வட கொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

இரண்டு நாடுகளும் இணைந்து 11 நாட்கள் வரை கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டன.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றபிறகு இடம்பெற்ற முதல் கூட்டு இராணுவ பயிற்சி இது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.