
விமானக் கண்காட்சியிலிருந்து இஸ்ரேலிய நிறுவனங்கள் நீக்கம்
சிலியில் நடைபெறவுள்ள சர்வதேச விமானக் கண்காட்சியிலிருந்து இஸ்ரேலிய நிறுவனங்கள் நீக்கப்படும் என சிலி பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
தென் அமெரிக்காவின் மிகப் பெரிய விமானக் கண்காட்சி எதிர்வரும் ஏப்ரல் மாதம் சிலியின் சான்டியாகோ நகரில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், 2024 கண்காட்சியில் இஸ்ரேலிய நிறுவனங்களை அனுமதிப்பதில்லை என சிலி அரசாங்கம் தீர்மானித்துள்ளது என சிலி பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான காரணத்தை அவ்வமைச்சு அறிவிக்கவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
