
விமல் வீரவன்சவை கைது செய்யுமாறு பிடியாணை!
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதற்காகக் கைது செய்து முன்னிலைப்படுத்தமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
75 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாகச் சேர்த்ததாகக் கூறி கையூட்டல், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்ட விமல் வீரவன்ச, நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதற்காக அவருக்கு இந்த பிடியாணைபிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
பிரதிவாதியின் பிணைதாரர்கள் மறுநாள் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
