
விபத்துக்குள்ளான விமானம் குறித்து எழுவர் கொண்ட குழு
விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானமொன்று இன்று வெள்ளிக்கிழமை காலை விபத்துக்குள்ளானது.
வாரியபொல, மினுவங்கெட்டே அருகே குறித்த விமானம் விபத்துக்குள்ளானது.
விமானம் கட்டுநாயக்க விமானப்படை முகாமிலிருந்து காலை 07.27 அளவில் புறப்பட்டுள்ளது.
புறப்பட்டு அண்ணளவாக 30 நிமிடங்களில் அதாவது 07.55 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தென்னந்தோப்பு ஒன்றில் விபத்துக்குள்ளான விமானம் முற்றாக எரியுண்டுள்ளது.
விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது நிலைமை பாரதூரமாக இல்லை என விமானப் படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான விமானம் குறித்து விசாரணைகளை நடத்துவதற்காக ஏழு பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க நியமித்துள்ளார்.
