விபத்துக்குள்ளான விமானப்படை வீரர்களின் பரசூட் பயிற்சிகளுக்கு இருமாத தடை

கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற பயிற்சிகளின் போது விபத்துக்குள்ளான விமானப்படை பரசூட் வீரர்கள் இருவரால் எதிர்வரும் இரு மாதங்களுக்கு பரசூட் பயிற்சிகளில் அல்லது சாகசங்களில் ஈடுபட முடியாதென விமானப்படை தளபதி தெரிவித்தார்.

விமானப்படை தலைமையகத்தில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே விமானப்படை தளபதி எயார் மார்சல் உதெனி ராஜபக்ச இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விபத்துக்குள்ளான இராணுவ வீரர் தற்போது வரையில் இராணுவ வைத்தியாசலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விமானப்படை வீரர்கள் இருவரும் வைத்தியசாலைகளில் இருந்து வீடுகளுக்கு சென்றுள்ள போதிலும், அவர்களால் இரு மாதங்களுக்கு பரசூட் சாகசங்கிளில் ஈடுபட முடியாதென அவர்களுக்கு சிகிச்சை அளித்த வைத்தியர் அறிவித்துள்ளதாகவும் விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.