விபத்துக்குள்ளான பஸ் சாரதியின் இரத்த மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு அனுப்படுகிறது
எல்ல-வெல்லவாய பகுதியில் விபத்துக்குள்ளான பஸ் சாரதியின் இரத்த மாதிரிகள் இன்று(08) மேலதிக பரிசோதனைகளுக்காக அரச ஆய்வாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
விபத்துக்குள்ளான பஸீன் சிதைவுகளும் இன்று அரச ஆய்வாளருக்கு அனுப்பப்படுகிறது .
கடந்த 4 ஆம் திகதி எல்ல-வெல்லவாய பகுதியில் 1,000 அடி பள்ளத்தில் சுற்றுலா சென்ற பஸ் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் தங்காலை நகர சபை ஊழியர்கள் 12 பேர் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகள் நேற்று (07) நடைபெற்றன .