விபத்தில் 8 வயது சிறுமி பலி : 4 பேர் காயம்

அனுராதபுரம் – கலென்பிந்துனுவெவ – வலனேகம சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

வலேனேகம – உபுல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த சிறுமியே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் கலென்பிடுனுவெவ பகுதியில் இருந்து உபுல்தெனிய நோக்கி பயணித்த போது மற்றைய மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த இருவர் கலேன்பிந்துனுவெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறுமியின் தாய் மற்றும் சகோதரன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.