விபத்தில் மூவர் பலி 39 பேர் படுகாயம்

தம்புள்ளை – மஹியங்கனை வீதியில் தனியார் பேருந்து ஒன்றும் வேனும் மோதிக்கொண்டதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 42 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேனுடன் மோதியதில் பஸ் பள்ளத்தில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் பேருந்தில் பயணித்த 37 பேரும் வேனில் பயணித்த ஐந்து பேரும் காயமடைந்து வில்கமுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.