விபத்தில் மூவர் படுகாயம்!

பதுளை கெப்பட்டிபொல வீதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தேகெதரயிலிருந்து பதுளை நோக்கி பயணித்த வேனில் ஐந்து பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தேகெதர பிரதேசத்தில் வசிக்கும் 23, 30 மற்றும் 26 வயதுடைய ஆண்களே காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

வேனின் பிரேக் சிஸ்டம் வேலை செய்யாததால் சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி சுவரில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்