
விபத்தில் படுகாயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுண்டிகுளம் சந்திப்பகுதியில், வீதியை கடக்க முற்பட்ட வேளை எதிரே வந்த கப்கரக வாகனத்தில் மோதுண்டு படுகாயம் அடைந்த குடும்பஸ்தர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 23 ஆம் திகதி, குறித்த குடும்பஸ்தர் வீதியை கடக்க முற்பட்ட வேளை, எதிரே வந்த கப்கரக வாகனத்தில் மோதுண்டு படுகாயம் அடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி, இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்
சுண்டிகுளம் சந்திப் பகுதியைச் சேர்ந்த, ஆதிமூலம் சிவகுமார் (வயது 55) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் தொடர்புடைய வாகன சாரதி தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
உயிரிழந்தவரின் சடலம், கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது
தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
