விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர்: சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

-மன்னார் நிருபர்-

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த வயோதிபர் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை யாழ் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

கடந்த புதன்கிழமை மாலை பாடசாலை முடிவடைந்து தனது பேரனை துவிச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த 67 வயதுடைய வயோதிபர் மீது அதி வேகமாக பயணித்த கூலர் வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தியது.

இதன் போது காயமடைந்த இருவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை வயோதிபர் சிகிச்சை பலனின்றி யாழ் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

கூலர் வாகனத்தின் சாரதியை கைது செய்த மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்