விபத்தில் நால்வர் படுகாயம்

மஹியங்கனை தம்பராவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலத்த காயமடைந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை தம்பராவ விகாரைக்கு அருகாமையில் இன்று சனிக்கிழமை நண்பகல் கார் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் பலத்த காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களின் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்