
விபத்தில் தாய் மரணம்: தந்தை மகள் படுகாயம்
கொழும்பு மாவட்டத்தின் ஹொரணை, பாணந்துறை வீதியின் குலுபன பிரதேசத்தில் ஏற்பட்ட வித்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பண்டாரகம, ரைகம பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான ஆர்.ஏ.தனுஜா பிரியதர்ஷனி (வயது – 40) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மூன்று வயது மகள் ஆகியோர் முச்சக்கரவண்டியில் ஹொரண நகருக்கு வந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, இவர்கள் பயணித்த முச்சக்கர வண்டி பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த தந்தை மற்றும் மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
