
விபத்தில் தந்தை உயிரிழப்பு : மகன் உட்பட மூவர் படுகாயம்!
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் கணவன் உயிரிழந்துள்ளதுடன், மனைவி, மகன் மற்றும் மாமனார் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கார் ஒன்று டிப்பர் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது காரில் பயணித்த கணவன் உயிரிழந்துள்ளதுடன், மனைவி, மகன் மற்றும் மாமனார் ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
