
விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழப்பு : தாய் வைத்தியசாலையில் அனுமதி
ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதியில் லபுகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு குடும்பத்தின் தந்தை மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்தனர்.
இவ்விபத்து இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தாய் புத்தளம் வைத்தியசாலையின் தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
