
விபத்தில் சிறுவன் படுகாயம்
-பதுளை நிருபர்-
பதுளை மஹியங்கனை வீதியில் பயணித்த வேன் ஒன்று தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 15 வயது சிறுவன் ஒருவன் பலத்த காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் பதுளையில் இருந்து மஹியங்கனை பக்கமாக அதி வேகமாக சென்று கொண்டிருந்த வேன் ஒன்று கைலகொட பகுதியில் திடிரென்று சாரதி வேனில் பிரேக் பிடித்த போது வேன் அருகாமையில் இருந்த சுவரில் மோதி வேன் சுமார் 15 மீற்றர் தூரம் இழுத்து சென்று அங்கு இருந்த தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது
விபத்து இடபெற்ற போது சாரதி உட்பட குறித்த வேனில் கைலகொட பகுதியை சேர்ந்த 15 மற்றும் 17 வயதுடைய ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் இருந்ததாகவும் விபத்தில் 15 வயதுடைய சிறுவன் பலத்த காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
இதன் போது வேனின் சாரதி கைதுசெய்யப்பட்டு வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய போது சாரதி மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்
கைதுசெய்யப்பட்ட சாரதி பண்டாரவளை நெலுவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
