
விபத்தில் சிக்கிய பிரபல குத்துச்சண்டை வீரர்
பிரபல குத்துச்சண்டை வீரர் அந்தோணி ஜோசுவா நைஜீரியாவில் ஒரு பயங்கரமான சிற்றூந்து விபத்தில் சிக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிவேகமாகச் சென்ற சிற்றூந்து ஒரு பாரவூர்தி முந்தி செல்ல முயன்றபோது இந்த விபத்து நேரிட்டதாகக் அந்நாட்டு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஜோசுவாவுடன் பயணித்த இரண்டு வெளிநாட்டினர் சம்ப இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
லேசான காயங்களுடன் தப்பிய ஜோசுவா உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
