பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ் படப்பிடிப்பின்போது இன்று திங்கட்கிழமை விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் மூணாறு பகுதியில் இடம்பெற்ற படப்பிடிப்பின்போது, ஜோஜு ஜார்ஜ் ஓட்டிச் சென்ற ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வரவு எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போதே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.