விபத்தில் கணவன் மரணம்: விபரீத முடிவு எடுத்த இளம்பெண்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மணிநகா் பகுதியில் கணவன் இறந்த சோகத்தை தாங்க முடியாத மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மணிநகா் பிரதேசத்தில் வசித்துவரும் சுதாகா் – தாரணிகாமாட்சி தம்பதியினருக்கு 3 வயது ஆண் குழந்தை உள்ள நிலையில் சுதாகர் பரமக்குடியில் உள்ள கட்டிடக்களுக்கு பிளம்பிங் மற்றும் நுளம்பு வலை அடிக்கும் தொழிலை செய்து வந்துள்ளார். கடந்த திங்கள்கிழமை கொல்லம்பட்டறை தெருவில் வேலைக்காக சென்றுள்ளார். சாரத்தில் ஏறி நுளம்பு வலை அடிக்கும் போது மேலிருந்து தவறி கிழே விழுந்தத்தில் பலத்த காயமடைந்தார்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

கணவன் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது மனைவி கடும் மன உளைச்சலுக்குள்ளாகி வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் அடித்து உடைத்துள்ளார். தாரணியை அவரது உறவினர்கள் சமாதானப்படுத்தியுள்ளனர். அப்போது பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருக்கும் தனது மகனை அழைத்து வாருங்கள் எனக் கூறியுள்ளார். வீட்டில் இருந்தவர்கள் சிறுவனை அழைத்து வர சென்ற வேளையில் தாரணி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இதுதொடர்பாக பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட தாரணிகாமாட்சி உடல் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதுகுறித்து பரமக்குடி நகா் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்