விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயம்

-யாழ் நிருபர்-

சிறுப்பிட்டி நீர்வேலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கணவன், மனைவி மற்றும் அவர்களது பிள்ளை படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது.

8 வயதுச் சிறுவன் கால் முறிந்த நிலையில், 48 வயதுடைய தந்தையும் 42 வயதுடைய தாயும் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தை நேரில் கண்டவர் வாதிட்ட நிலையில் கார் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.