விபத்தில் ஒருவர் பலி : சாரதி கைது

-பதுளை நிருபர்-

ரிதிமாலியயெத்த ஆந்தாவுல்பாத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளும் வேனும் மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 13 கட்டை ஆந்தாவுல்பத பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஆந்தாவுல்பாத பகுதியில் இருந்து ரிதிமாலியயெத்த நோக்கி பயணித்த வேனும், ரிதிமாலியயெத்தவிலிருந்து ஆந்தாவுல்பாத நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி பலத்த காயமடைந்த நிலையில் மஹியங்கனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சிகிச்சை அளிக்கபட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாவுல பகுதியை சேர்ந்த வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரை மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ரிதிமாலியத்த பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.சி.வீரகோன் தலைமையில் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்