
விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
மஸ்கெலியா – நல்லத்தண்ணி பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிச் சென்ற பாரவூர்தி ஒன்றும், மஸ்கெலியாவிலிருந்து நல்லதண்ணி நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை விபத்து தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
