
விபத்தில் இருவர் காயம்
யாழ்ப்பாணம் – உரும்பிராய் சந்திக்கு அருகாமையில் இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தியில் இருந்து மருதனார்மடம் செல்லும் வீதியில் உரும்பிராய் சந்திரோதயா (ஞானபண்டிதர்) பாடசாலைக்கு அருகாமையில் இன்று மாலை 2 மணியளவில் டிப்பர் மற்றும் ஹண்டர் ரக வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் இரு வாகனங்களின் சாரதிகளும் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் படுகாயமடைந்த சாரதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை விபத்துடன் தொடர்புடைய இரு வாகனங்களும் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுவதுடன் குறித்த விபத்து காரணமாக அப்பகுதியுடனான போக்குவரத்தும் சிறிது நேரம் தடைப்பட்டது.
குறித்த விபத்து அதிவேகம் காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
