விபசார விடுதிகளுக்கு செல்லும் ஆண்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

களுத்துறை மாவட்டம் அங்குருவாதொட்ட ரெமுன ஏரிக்கு அருகில் பாணந்துறை பகுதியில் இயங்கிவரும் விபசார விடுதியை சோதனையிட்டு கடந்த மே மாதம் 21ஆம் திகதி பாணந்துறை மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உட்பட 7 பேரில் 4 பெண்கள் அடங்குவதுடன் அதில் ஒருவருக்கு கொனோரியா எனப்படும் சமூக நோய் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட சந்தேக நபர் 22 வயதுடைய யுவதி என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் மொரட்டுவையைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் பலருடன் சேர்ந்து பெண்களை பணத்திற்காக விற்பனை செய்யும் இரகசியக் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு நடத்தி சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த மோசடிக்கு தலைமை தாங்கிய நபர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர், கடை ஒன்றின் உரிமையாளரிடம் பணப்பையை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் மேலும் இருவர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் விபசார விடுதிகளுக்கு செல்லும் ஆண்கள் பாலியல் நோய் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.