
விந்து தானம் மட்டுமே : கருமுட்டை தானம் இல்லை – காசல் மகளிர் மருத்துவமனை
கொழும்பிலுள்ள காசல் மகளிர் மருத்துவமனையில் கருமுட்டை தானத் திட்டம் (Egg Donation Program) எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் அஜித் தந்தனாராயண தெரிவித்துள்ளார்.
தற்போது விந்து தானத் திட்டம் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
சமீபத்தில் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த விந்து வங்கியில் 150க்கும் மேற்பட்ட ஆண்கள் தானம் வழங்கப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் 10 பெண்கள் கருத்தரித்துள்ளனர், மேலும் 200க்கும் அதிகமானோர் தற்போது இந்த திட்டத்தின் மூலம் உதவியைப் பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் முட்டை தானத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அவர் மறுத்ததுடன், வைத்தியசாலையில் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
