விநாயகர் சதுர்த்தி 2025 வழிபாட்டிற்கான நல்ல நேரம்

விநாயகர் சதுர்த்தி விழா குழந்தைகள் முதல்வர் பெரியவர்கள் வரை அனைவராலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒன்று ஆன்மிக பண்டிகையாகும்.

விநாயகப் பெருமான் ஞானம், வெற்றிகளை தரக் கூடியவர் என்பதால் அனைத்து தரப்பினரும் விநாயகரின் அருளை பெறுவதற்காக பக்தி சிரத்தையுடன் வழிபடுவது உண்டு.

விநாயகரை வழிபடும் முறை மிகவும் எளிமையானது என்றாலும், மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும்.

இந்தியாவில மாத்திரமின்றி இலங்கையிலும் வெகு சிறப்பாக, கோலாகலமாகக் கொண்டாடப்படும் விழாக்களில் விநாயகர் சதுர்த்தி மிக முக்கியமான ஒன்றாகும்.

விநாயகர் சதுர்த்தி விழாவை வெகு சிறப்பாக கொண்டாட நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.

நாடு முழுவதிலும் பல்வேறு வகையான வண்ண வண்ண விநாயகர் சிலைகள் விற்பனையும், விநாயகர் சதுர்த்தி பூஜைக்கான மற்ற பொருட்களின் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.

விநாயகர் சிலை வாங்குவதற்கான நல்ல நேரத்தில் ஓகஸ்ட் 26ம் திகதியான இன்று மாலையே விநாயகர் சிலையை வீட்டிற்கு வாங்கிவந்து வைக்க வேண்டும்.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஓகஸ்ட் 27ம் திகதி  புதன்கிழமை கொண்டாடப்பட உள்ளது.

விநாயகப் பெருமானுக்குரிய புதன்கிழமையில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகும். இதனால் விநாயகப் பெருமானின் அருளும், புத்திகாரகன் என ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படும் புதன் பகவானின் அருளையும் பெற முடியும்.

வீட்டில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்வதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பன்னீர் அல்லது தீர்த்தம் அல்லது மஞ்சள் கலந்த தண்ணீரால் சுத்தம் செய்து விட்டு, ஒரு மனையில் அழகாக கோலமிட்டு, அதன் மீது ஒரு தாம்பூலம் அல்லது வாழை இலையில் பச்சரிசி பரப்பி அதன் மீது விநாயகர் சிலையை வைக்க வேண்டும்.

விநாயகர் சிலையை அருகம்புல், எருக்கம்பூ மாலை, பூ அணிவித்து அலங்கரிக்க வேண்டும். விநாயகர் சிலையில் குண்டுமணி வைத்து கண் திறக்க வேண்டும். அவரது வயிற்றுப் பகுதியில் காசு ஒன்றை வைக்க வேண்டும்.

 

விநாயகர் சதுர்த்தி 2025 வழிபடுவதற்கான நேரம் :

  • காலை 07.45 மணி முதல் காலை 08.45 மணி வரை
  • விநாயகர் சதுர்த்தி 2025 வழிபடுவதற்கான நேரம் :
  • காலை 07.45 மணி முதல் காலை 08.45 மணி வரை
  • காலை 10.40 மணி முதல் பகல் 01.10 மணி வரை
  • மாலை 05.10 மணி முதல் இரவு 07.40 வரை

ஆகஸ்ட் 27ம் திகதி மாலை 03.52 மணியுடன் சதுர்த்தி திதி நிறைவடைந்து விடுகிறது.

இருந்தாலும் சிலருக்கு மாலை நேரத்திலேயே விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்யும் வழக்கம் இருக்கும்.அவர்கள் மாலை 5 மணிக்கு பிறகோ அல்லது 6 மணிக்கு பிறகோ விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினை செய்து கொள்ளலாம்.

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கு பிறகு விநாயகர் சிலை கரைப்பதை மட்டும், விநாயகர் சிலை வாங்கிய நாளை கணக்கிட்டு, 3 அல்லது 5 வது நாளில் எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்க வேண்டும். ஓடும் தண்ணீரில் விநாயகர் சிலையை கரைப்பது மிகவும் விசேஷமானதாகும்.