
வித்தியா கொலை வழக்கில் கைதானவர் சிறையில் மரணம்
யாழ். புங்குடிதீவு மாணவி சிவலோநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.
பல்லேகல தும்பர சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புங்குடதீவு கைட்ஸ் பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் தவகுமார் செந்தில் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தொடர்பான மேன்முறையீட்டு மனுவை சமர்ப்பித்ததையடுத்து, அது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
