
விண்வெளியில் திருமணம் செய்து கொள்ள போகும் 63 வயது டாம் குரூஸ்!
63 வயதாகும் ஹொலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ், உலக அளவில் ரசிகர்களை கொண்டிருக்கிறார்.
1981இல் வெளியான ‘Endless love’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
‘மிஷன் இம்பாசிபிள்’ சீரிஸ் மூலம் உலக அளவில் ரசிகர்களை பெற்றார்.
அண்மையில் வெளியான இவரது ‘மிஷன் இம்பாசிபிள்’ சீரிஸின் இறுதி பாகம் உலக அளவில் 3 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது.
ஹொலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் அனா டி அர்மாஸ் 2006 இல் வெளியான ‘Virgin rose’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
37 வயதான அனா டி அர்மாஸ் 2022இல் வெளியான ‘தி க்ரே மேன்’ படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் தனுஷ் நடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த இரண்டு சூப்பர் ஸ்டார் நடிகர்களும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக தகவல் வெளியானது.
இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியாகின.
சாகசத்தை விரும்பும் இந்த ஜோடிகள் தங்கள் திருமணம் வழக்கமாக இருக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.
அதன்படி தங்கள் திருமணத்தை விண்வெளியில் நடத்த முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாம் குரூஸை பொறுத்தவரை விண்வெளி பயணம், சாகசங்களின் காதலன்.
இதனால் விண்வெளியில் திருமணம் செய்துகொள்ளப்போகும் முதல் ஜோடி என்ற யோசனை அவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றபோதிலும், விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
டாம் குரூஸ் 3 முறை திருமணமானவர்.
அனா டி அர்மாஸ்க்கு 2011 இல் திருமணம் நடந்து 2013 இல் விவாகரத்து பெற்றவர் ஆவார்.
