விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து ஆசிரியர்கள் விலக தீர்மானம்

நாளை திங்கட்கிழமை முதல்  கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளில் இருந்து விலக ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்ற மதிப்பீட்டாளர்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக விசேடமாக கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட படிவத்தினை பயன்படுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்  எரிபொருளை பெற்றுத்தரக்கோரி நாட்டின் பல பாகங்களிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், பதுளை உள்ளிட்ட பல பகுதிகளில் ஆசிரியர்கள் இந்தப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.